Header Ads

இரவில் ரவியின் வீட்டில் இடம்பெற்ற முக்கிய சந்திப்பு

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி எதிர்வரும் பொது தேர்தலில் போட்டியிடவுள்ள சின்னம் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்கவும் கலந்துரையாடியுள்ளனர்.


கொழும்பில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் இல்லத்தில் நேற்றைய தினம் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் அன்னப்பறவை சின்னத்திற்கு சொந்தமான புதிய ஜனநாயக முன்னணியின் செயலாளர் ஷர்மிளா பெரேராவும் கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை அடுத்தமாதம் 2 ஆம் திகதிக்கு பின்னர் புதிய கூட்டணியின் சின்னம் அறிவிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.