ரணிலையும் நண்பர்களையும் பாதுகாக்கும் மஹிந்த
அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் உடன்பாட்டு அரசியல் இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலம் முழுவதும் மகிந்த ராஜபக்ச அணியினரை ரணில் விக்ரமசிங்க, மைத்திரிபால சிறிசேன ஆகியோர் பாதுகாத்தனர்.
தற்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்துள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில் அலுவலகம் வழங்கப்பட்டுள்ளதுடன் 8 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் ரணிலின் பாதுகாப்புக்காக 200 பேரை மகிந்த ராஜபக்ச வழங்கியுள்ளார். இதுதான் உடன்பாட்டு அரசியல்.
ரணில் பதவியில் இருக்கும் வரை மகிந்த மற்றும் அவரது குடும்பத்தினரை பாதுகாத்தார்.
தற்போது மகிந்த பதவிக்கு வந்து ரணிலையும் நண்பர்களையும் பாதுகாக்கின்றார் என குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment