புர்கா தடை செய்யப்பட வேண்டும்; முஸம்மில் - அது அடிப்படை உரிமை; முஜிபுர் ரஹ்மான்
அடையாளத்தை உறுதி செய்ய முடியாத வகையில் முகத்தை மறைக்கும் புர்கா உட்பட அனைத்து முக கவசங்களையும் தடை செய்யுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான மேற்பார்வைக் குழு பரிந்துரை செய்துள்ளது.
குறித்த குழு இது தொடர்பான விசேட அறிக்கை ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
இந்நிலையில் முஸ்லிம் பெண்களின் புர்காவை தடை செய்வது குறித்து முஸ்லிம் அரசியல்வாதிகள் கருத்து வௌியிட்டுள்ளனர்.
"1980ம் ஆண்டின் பின்னரே முகத்தை மறைக்கும் புர்கா இலங்கையில் புலக்கத்துக்கு வந்தது. அது கட்டாயமாக சட்டத்தால் தடை செய்யப்பட வேண்டும். அத்துடன் முஸ்லிம் சமூகமே அதனை புறக்கணிக்கக் கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டும்". இவ்வாறு கூறியுள்ளார் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில்.
அதேவேளை தமக்கு தேவையானது போல் ஆடை அணியும் சுதந்திரம் தமக்கு இருப்பதாக சிலர் விவாதிக்கின்றனர். எனினும் இது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையுமாயின் நாம் விரிவாக கலந்துரையாடி, இது சம்பந்தமாக தீர்மானம் எடுக்க வேண்டும் என்று முன்னால் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.எம் ஹலீம் கூறியுள்ளார்.
அதேநேரம் இது தொடர்பில் கருத்து வௌியிட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்,
தாம் விரும்பிய ஆடைகளை அணிவதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது.அதனை அடிப்படை உரிமையாக கருதப்பட முடியும். அதனால் யாருடைய அடிப்படை உரிமையையும் ஒடுக்குவதற்கு தம்மால் இணங்க முடியுது. அத்துடன் அடிப்படை உரிமையை சட்டம் உருவாக்கி தடை செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறு கூறியுள்ளார் முஜிபுர் ரஹ்மான்.

Post a Comment