ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒருபோதும் ஆட்சிக்கு வரமுடியாது
காலத்துடன் சேர்ந்து மாற்றமடைந்து முன்னோக்கி செல்லாமல் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒருபோதும் ஆட்சிக்கு வரமுடியாது என்று அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக ரணவக கூறியுள்ளார்.
நேற்று மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அரசியல் கட்சி ஒன்றின் பிரதான இலக்கு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதே என்றும், அதிகாரம் இல்லாவிட்டால் கட்சியின் கடந்த கால வரலாறோ அல்லது வேறு எதுவுமோ பிரயோசனமற்றது என்று கூறியுள்ளார்.
இதற்காக பல கட்சிகள் பல்வேறு காலகட்டங்களில் பல மாற்றங்களுடன் முன்னோக்கி வந்துள்ளதாகவும், அதேபோன்று ஐக்கிய தேசிய கட்சியும் மாற்றங்களை செய்து முன்னோக்கி செல்ல வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக ரணவக கூறியுள்ளார்.

Post a Comment