தனது சாதனையை தானே முறியடிப்பாரா ரணில்
அடுத்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் இருந்து போட்டியிட ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க முடிவு செய்துள்ளார்.
இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்குப் பதிலாக தேசிய பட்டியலில் இருந்து பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுமாறு அவரது நண்பர்கள் கோரிய போதிலும் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையின் தேர்தல் வரலாற்றில் இன்றுவரை அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்ற சாதனையை ரணில் விக்ரமசிங்க தக்கவைத்துள்ளார். அது 2015ம் ஆண்டு பொது தேர்தலில் 500,566 வாக்குகளை பெற்றுக்கொண்டதன்மூலம்.
இருப்பினும் 2020 ஆம் ஆண்டளவில் அவரது கட்சியின் புகழ் வெகுவாகக் குறைந்துவிட்டது என்பது இரகசியமல்ல. இதற்கமைய இம்முறை ரணில் விக்ரமசிங்க தனது வாக்கு சாதனையின் ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையிலான முன்னுரிமை வாக்குகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
எனவே, இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடாமல் தேசிய பட்டியலில் வருமாறு அவரது நெருங்கிய நண்பர்கள் உள்ளிட்ட பலர் கோரியுள்ள போதிலும், அவர் தனது வழக்கமான பிடிவாத கொள்கைகளில் எவ்வித மாற்றமும் இல்லாமல் மீண்டும் கொழும்பிலிருந்து போட்டியிட ஒரு முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கமைய குறுகிய காலத்தில் மிகவும் பிரபலமற்ற எம்.பி.யாக புதிய சாதனை படைக்கும் வாய்ப்பை ரணில் விக்கிரமசிங்க உருவாக்கியுள்ளார்.

Post a Comment