Header Ads

விமான கொள்வனவில் மோசடி செய்த கணவனுக்கும் மனைவிக்கும் எதிராக அதிரடி நடவடிக்கை

எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்புடைய ஸ்ரீ லங்கன் விமான சேவையின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் கபில சந்ரசேன மற்றும் அவருடைய பாரியார் பிரியங்க நியோமலி விஜயநாயக்க ஆகியோரை நீதிமன்றத்தில் பிடியாணை பெற்று கைது செய்யுமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.


விமானக் கொள்வனவு தொடர்பாக ஶ்ரீலங்கன் விமான சேவை மற்றும் ஏயார்பஸ் நிறுவனத்திற்கு இடையில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கலின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதிகாரிகளுக்கு நேற்று உத்தரவிட்டுள்ளார்.

அத்தோடு இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் விசாரணை மேற்கொண்டு தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்ததார்.

இந்த சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுக்கும் விசாரணைகளின் முன்னேற்றத்தைக் கவனத்திற்கொண்டு சட்ட மா அதிபர் இந்த அறிவித்தலை இன்று விடுத்துள்ளார்.
Powered by Blogger.