Header Ads

பிரதமர் மஹிந்தவின் அமைதியால் ஏற்பட்ட பிரச்சினை

கடந்த அரசாங்க காலதில் மேற்கொள்ளப்பட்ட வீட்டு நிர்மாண பணிகள் தொடர்பாக கேள்வி கேட்பதற்கு எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பிரதமரிடம் அனுமதி கேட்டும் அதற்கு பிரதமர் அமைதி காத்ததால் பாராளுமன்றத்தில் ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

பாராளுமன்றம் இன்று புதன் கிழமை சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது.

பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்ற பின்னர் பிரதமரிடம் கேட்கப்படும் கேள்வி நேரத்தின்போது ஆளும் கட்சி உறுப்பினர் அநுராத ஜயரத்னவினால் முன்வைக்கப்பட்ட, கடந்த அரசாங்க காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை, இதுவரை மக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள மொத்த வீடுகளின் எண்ணிக்கை போன்ற கேள்விகளுக்கு பிரதமர் பதிலளித்திருந்ததார்.

அதனைத்தொடர்ந்து கடந்த அரசாங்கத்தில் வீடமைப்பு அமைச்சராக இருந்தவர் என்ற அடிப்படையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ்விடம் கேள்வியொன்றை கேட்பதற்கு முற்பட்டவேளை, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டு, நிலையியற் கட்டளை பிரகாரம் மேலதிக கேள்வி கேட்கமுடியாது என்றனர்.

இதன்போது சபாநாயகர் கருஜயசூரிய, பிரதமர் அனுமதித்தால் அதற்கான அனுமதியை என்னால் வழங்க முடியும். அவ்வாறு இல்லாமல் நிலையியற் கட்டளை பிரகாரம் இரண்டு கேள்விகளுக்கு மேல் கேட்கமுடியாது என்றார்.
Powered by Blogger.