அரசியல்வாதியை தைரியமாக எதிர்த்த பெண் அதிகாரிக்கு தற்போது ஏற்பட்டுள்ள பரிதாப நிலை
தென்னிலங்கை அமைச்சர் ஒருவரின் உத்தரவினை ஏற்று நடக்க முடியாது என மறுப்பு வெளியிட்ட பெண் அதிகாரிக்கு எதிராக தற்போது விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெருவிக்கப்படுகிறது.
சிங்கள செய்தி இணையத்தளம் ஒன்று இந்த செய்தியை வௌியிட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு முன்னிலையில் சதுப்புநில சுற்றுச்சூழல் கட்டமைப்பினை அழித்து அனுமதியற்ற நிர்மாணப்புகளுக்கு இடம் வழங்க முடியாதென அரச அதிகாரியான தேவானி ஜயதிலக்க அண்மையில் தெரிவித்தார்.
அந்த பெண் அதிகாரியின் துணிகரமான செயலுக்கு பலரிடமும் இருந்து பாராட்டுக்கள் குவிந்தன.
இதற்கு முன்னர் ஏற்பட்டிருந்து முரண்பாட்டு நிலமையை அடிப்படையாக வைத்து இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment