பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு - களுகங்கையின் நீரை குடிக்க வேண்டாம்
களுத்துறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் பாரவூர்தி மூலம் கிடைக்கும் நீரை குடிப்பதற்காக மட்டும் பயன்படுத்துமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக கலுகங்கை நீரில் கடல் நீர் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நீருடன் உப்பு சேர்வதனால் இந்த நீர் குடிப்பதற்கு உகந்ததல்ல எனவும் அதனை வேறு தேவைகளுக்காக பயன்ப்படுத்துமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாத்துவ,களுத்துறை, பேருவலை,பயாகல,போம்புவல ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு பாரவூர்தி மூலம் நீர் விநியோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பபட்டுள்ளது.

Post a Comment