Header Ads

வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் யார்? தோல்வியடையும் வேட்பாளர்கள் யார்? இரகசியக் கருத்துக் கணிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் மாவட்ட மட்டத்தில் பிரதான கட்சிகளுக்கு கிடைக்கும் ஆசனங்கள் மாத்திரமல்லாது, வெற்றி பெறும் மற்றும் தோல்வியடையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் என்பதை அறிய இரண்டு முழுமையான கருத்து கணிப்புகளை பிரதான கட்சிகள் நடத்த உள்ளதாக தெரியவருகிறது.


இதனடிப்படையில் தற்போதும் கடும் நெருக்கடி நிலைமையை எதிர்நோக்கி வரும் ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் ஆதரவு அணியினர் மேல் மாகாணத்தின் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை அடிப்படையாக கொண்டு இரகசியமான கருத்து கணிப்பை ஏற்கனவே நடத்தியுள்ளது.

ரணில் விக்ரமசிங்க தலைமையில் போட்டியிட்டால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான கூட்டணிக்கு கிடைக்கும் ஆசனங்களின் எண்ணிக்கை மற்றும் சஜித் தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டால் கிடைக்கும் ஆசனங்களின் எண்ணிக்கை சம்பந்தமாக இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

இந்த கருத்து கணிப்பு தொடர்பாக கம்பஹா மாவட்டத்தின் முடிவுகள் ஏற்கனவே கிடைத்துள்ளன. எனினும் அதுபற்றி தெரிவிக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இதேவிதமாக மூன்று கட்டங்களின் கீழ் கருத்து கணிப்பை நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்த கருத்து கணிப்பு நாடளாவிய ரீதியில் விரைவில் நடத்தப்பட உள்ளது. பொதுஜன பெரமுனவின் வாக்கு வங்கி, மக்கள் விரும்பும் நபர்கள் யார் என்பதை அடையாளம் காண்பது இந்த கருத்து கணிப்பின் நோக்கம் என அந்த கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Powered by Blogger.