ரணிலை மீண்டும் கலக்கமடையச் செய்துள்ள மந்திராலோசனை
எதிர்வரும் தேர்தலில் யானை சின்னத்தினை கைவிட்டு அன்னம் சின்னத்தில் போட்டியிட வேண்டாம் என ஐக்கிய தேசிய கட்சியின் சட்ட ஆலோசகர்கள் கட்சி தலைவர் ரனில் விக்ரமசிங்கவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
முழு அதிகாரம் பெற்ற கூட்டணி ஒன்றில் போட்டியிட்டால் அந்த கூட்டணிக்கே தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களை கையாளும் அதிகாரம் கிடைக்கும் எனவும் இதனால் ஐக்கிய தேசிய கட்சி பின்னடைவை சந்திக்கும் என அவரிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கூட்டணி ஒன்றில் போட்டியிட்டால் தேசிய பட்டியல் நியமனம் உள்ளிட்ட சகல அதிகாரங்களும் அக்கூட்டணி தலைவர் மற்றும் செயலாளருக்கே கிடைக்கும் என ரனில் விக்ரமசிங்கவுக்கு சுட்டிக்காட்டுள்ளது.
இன்றைய தினம் ஐக்கிய தேசிய கட்சி செயற்குழு கூடவுள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
Post a Comment