Header Ads

ஹிஸ்புல்லாவின் பெட்டிக்களோ கெம்பஸ் தொடர்பில் எழுந்துள்ள புதிய சர்ச்சை

கிழக்கின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நிர்மாணித்த மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகத்திற்காக 15 ஏக்கர் காணி சட்டவிரோதமாக பெறப்பட்டதாக குற்றப்புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.


2013ஆம் ஆண்டில் மஹாவலி அதிகாரசபை இந்த காணியை ஹரா நிதியம் என்ற அமைப்புக்கு விடுவித்துள்ளது.

கிழக்கு மாகாண இளைஞர்களுக்கான தொழில் பயிற்சி கல்விக்காக விடுக்கப்பட்ட கோரிக்கைக்காகவே இந்த காணி விடுவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 35 ஏக்கர் காணி குத்தகையின் அடிப்படையில் ஒரு ஏக்கர் 14340 ரூபா என்ற தொகைக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கு மேலதிகமாகவே 2018ஆம் ஆண்டு அரசாங்கத்தின் 15 ஏக்கர் காணி பெறப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழக அமைப்புக்காக 4.5 பில்லியன் ரூபா கிடைத்துள்ளது.

இதில் 3.6 பில்லியன் ரூபாவை சவூதியில் உள்ள அமைப்பு ஒன்று வழங்கியுள்ளது. இந்த பல்கலைக்கழக அமைப்பு தொடர்பில் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பல தடவைகளாக குற்றப்புலனாய்வுத் துறையினரால் விசாரணை செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.