UNP உள்வீட்டுப் பிரச்சினையால் சந்திரிகா எடுத்துள்ள அதிரடி தீர்மானம்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன தலைமையில் உருவாக்கப்படுகின்ற புதிய கூட்டணிக்கு எதிராக செயற்படாதிருக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலமை காரணமாக சந்திரிகா இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தமக்கு கிடைத்த அழைப்பின் பேரில் இந்த முறை நடைபெற்ற சுதந்திர தின நிகழ்விலும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது சந்திரிகா பண்டாரநாயக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் மிகவும் சுமுகமான முறையில் உரையாடிக் கொண்டிருந்தமையும் கூறத்தக்கது.

Post a Comment