Header Ads

இன்று விசாரணைக்கு வந்த வசீம் தாஜுதீனின் வழக்கு - நீதிமன்றில் ஆஜராகாத இரண்டு சந்தேகநபர்கள்

றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் கொலை சம்பவம் தொடர்பான வழக்கை கொழும்பு மேலதிக நீதவான் ஷலனி பெரேரா இன்று எதிர்வரும் மார்ச் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.


சம்பவம் தொடர்பாக 500 தொலைபேசி அழைப்புகள் சம்பந்தமாக ஆய்வு செய்து அறிக்கை தயாரித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குற்றவியல் விசாரணை திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கின் சந்தேக நபர்களான முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க, முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர ஆகியோர் சுகவீனம் காரணமாக இன்று நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
Powered by Blogger.