Header Ads

சட்டங்களால் மக்களுக்கு சுதந்திரமில்லை

அரசு அமுல்படுத்தியுள்ள சட்டத் திட்டங்களால், சாதாரண மனிதனுக்கு சுதந்திரமாக வாழ முடியாத சூழல் உருவாகியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சட்டம் என்பது நல்ல வழிக்கு கொண்டு வருவதற்கு இருக்கும் நிவாரணம் மாத்திரமே. சட்டத் திட்டங்களால் மக்களை கஷ்டங்களுக்கு உள்ளாக்க முடியாது. அரச சேவைகளை பெற்றுக்கொள்ளும் போது மக்கள் கஷ்டத்திற்கு உள்ளாவதை தவிர்க்க வேண்டும்.

சட்டத் திட்டங்கள் காரணமாக தேவைக்காக ஆற்றில் இருந்து ஒரு கூடை மணல் எடுக்க முடியவில்லை. மண்ணை அகழ்ந்து செங்கல் செய்யவும் முடியாத நிலைமை உருவாகியுள்ளது. இந்த நிலைமையில் கூடிய விரைவில் மற்றங்களை செய்ய வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Powered by Blogger.