முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனான தொலைபேசி குரல் பதிவு பாராளுமன்ற ஹென்சார்ட்டில்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க குரல் பரிசோதனைக்காக இரசாயனப் பகுப்பாய்வாளர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகளினால் இன்று (07) காலை 10.30 மணிக்கு பத்தரமுல்ல, பெலவத்த பகுதியில் அமைந்துள்ள இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது கருத்து தெரிவித்த ரஞ்சன் ராமநாயக்க, முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் மற்றும் அமைச்சர்கள் சிலரின் குரல் பதிவுகள் அடங்கிய தொலைபேசி உரையாடல்களை பாராளுமன்றில் ஹென்சாட்டிற்கு வழங்கியுள்ளதாக கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனான ஒரு தொலைபேசி உரையாடல் இவ்வாறு வழங்கப்பட்டுள்ளதாகவும், அவருடனான மேலும் சில தொலைபேசி உரையாடல் பதிவுகள் தன்னிடம் இருப்பதாகவும் ரஞ்சன் ராமநாயக்க கூறியுள்ளார்.

Post a Comment