முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் சற்று முன்னர் வெடிப்பு சம்பவம் (படங்கள்)
முல்லைத்தீவு - சிலாவத்தை மாதிரி கிராமம் பகுதியில் சற்று முன்னர் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த நபர் சிலாவத்தை மாதிரி கிராமம் பகுதியில் இருந்து வியாபாரத்திற்கென அபாயகரமான வெடி பொருட்களை உடைத்து அதிலுள்ள மருந்தை எடுக்க முற்பட்டபோது மோட்டார் வகையான குண்டொன்று வெடித்துள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்தவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தண்ணீர் ஊற்று, முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த சூசைப்பிள்ளை புலேந்திரன் (42 வயது) என்ற நபரே சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, இராணுவத்தினரும் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து குறித்த இடத்தை சோதனையிட்டு வருகின்றனர்.


Post a Comment