இனிமேல் அப்பம் சாப்பிடுவதில்லை
வேலை செய்வதற்கு தேவை இருக்கின்ற ஜனாதிபதி ஒருவர் தமக்கு கிடைத்திருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அரச அதிகாரிகள் வேலை செய்வதற்கு பயப்படுகிறார். திடீரென்று வேறொரு அரசாங்கம் வந்துவிட்டால் அவர்களின் நிலை அவ்வளவுதான். அந்தப் பயம் அவர்களுக்கு.
எமது செயலாளர் காலையில் அப்பம் சாப்பிட்டுவிட்டு மாலையில் அந்தப் பக்கம் சென்றுவிட்டார்.
இனி மேலும் அப்பம் சாப்பிடுவதில்லை. அந்தப் பாடத்தை கற்றுக் கொண்டுள்ளோம்.
எமது உத்தரவுகளை செயற்படுத்தும் அரச அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும்.
அரச அதிகாரிகளின் செய்கின்ற கடமைகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யாதிருப்பது தொடர்பில் திருத்தம் செய்ய எதிர்பார்த்துள்ளோம்என்று பிரதமர் கூறியுள்ளார்.

Post a Comment