அதிரடியை ஆரம்பித்த சஜித் - ரணில் சகாக்களுக்கு ஏற்படப் போகும் ஆபத்து
சஜித் பிரேமதாஸ தலைமையில் அமையவுள்ள புதிய அரசியல் கூட்டணியில் ஐ தே க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் நெருங்கிய சகாக்கள் எனக் கருதப்படும் சிலருக்கு எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு மறுக்கப்படலாமென நம்பகரமாக அறியமுடிகின்றது.
இதன்படி தற்போதைய எம் பிக்கள் ரவி கருணாநாயக்க ,வஜிர அபேவர்தன உட்பட்ட சிலருக்கு சஜித்தின் அரசியல் கூட்டணியில் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்படலாமென தெரிகிறது.
அப்படி மறுக்கப்படுவோருக்கு தேசியப் பட்டியலில் இடமளிக்கப்படலாமென சொல்லப்பட்டாலும் அது உறுதியான முடிவல்லவென விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Post a Comment