Header Ads

விரட்டினாலும் வௌியேற மாட்டோம்

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து தான் நாங்கள் எமது அரசியல் வேலைகளை செய்வோம். எங்களை அங்கிருந்து விரட்ட முயற்சித்தாலும் நாங்கள் வெளியேற மாட்டோம்.


அரசியல் கூட்டணியின் தலைவராக செயலாளராக எங்களை நியமித்தால் நாங்கள் செயற்பட இடமளிக்கவேண்டும்.

எமக்கு கட்சி சின்னமல்ல முக்கியம்.எண்ணமே முக்கியம்.  சஜித்தின் பெயரை பயன்படுத்தி அரசியல் நன்மையடைய சிலர் முயற்சிக்கின்றனர்.”

இவ்வாறு கொழும்பில் இன்று நடந்த செய்தியாளர் மாநாட்டில் ரஞ்சித் மத்துமபண்டார எம் பி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது ,

புதிய அரசியல் கூட்டணியின் சின்னம் தொடர்பான பிரச்சினை எழுந்துள்ளது. ஆனால் அந்த பிரச்சினையை வைத்து எமது செயற்பாடுகளை நாம் நிறுத்திவிடமுடியாது.

கட்சியின் செயற்குழுவில் எடுத்த தீர்மானத்திற்கு முரணாக அகில விராஜ் கருத்து கூறியுள்ளார்.

யானை சின்னத்தில் போட்டியிடுவது குறித்து அன்று எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஐ தே க விலிருந்து இந்த கூட்டணியில் பதவி எடுப்பது ஒரு சிக்கலான விடயமல்ல.

கடந்த வருடம் ரணிலின் பெயரும் இடப்பட்டதே. மைத்ரிபால சிறிசேன சுதந்திரக்கட்சியில் இருந்து கூட்டணியில் போட்டியிட்டாரே ?அப்படிதான் இதுவும்.

சின்னம் என்ற சர்ச்சையை வைத்து கூட்டணியை சிதறடிக்க இடம் கொடுக்க முடியாது.
என்றும் குறிப்பிட்டார் ரஞ்சித் எம் பி
Powered by Blogger.