Header Ads

இராணுவ தளபதி மீதான தடை - அமெரிக்காவுக்கு தகவல் வழங்கியது மங்கள மற்றும் சந்திரிகா

இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட தடை சம்பந்தமாக ஆரம்ப தகவல்களை அமெரிக்காவுக்கு வழங்கியிருப்பது, கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாகவே என்று ஜம்புரவெல சந்தரத்ன ரத்ன தேரர் கூறியுள்ளார்.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, நிமல்கா பெர்னாண்டோ மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்கள் ஊடாக இந்த தகவல்கள் வழங்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

அவர்களினால் கடந்த ஐந்து ஆண்டு காலமாக வழங்கப்பட்ட தகவல்கள் அமெரிக்காவினால் நம்பகரமான தகவல்கள் என்று கருதப்படுவதாக தேரர் கூறியுள்ளார்.

இன்று இராணுவ தளபதிக்கு ஏற்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், நாளை பாதுகாப்புச் செயலாளருக்கும் நாளை மறுநாள் ஜனாதிபதிக்கும் கூட சுமத்தப்படும் என்று கூறியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
Powered by Blogger.