Header Ads

ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தல் - தேர்தல் ஆணைக்குழு தீர்மானம்

பாராளுமன்ற பொதுத்தேர்தலை ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது.


மார்ச் 2 ஆம் திகதி பாராளுமன்றத்தை கலைக்கலாமா என்பது குறித்து ஜனாதிபதியின் செயலாளர் சட்ட மா அதிபரிடம் வினவியதையடுத்து, அதற்கு சட்டச் சிக்கல் இல்லையென முன்னதாக சட்ட மா அதிபரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி மார்ச் 2 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் மார்ச் 6 முதல் 11 ஆம் திகதிக்குள் வேட்புமனுக்களை பெறவும் , ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தலை நடத்தவும் தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அப்படி தேர்தல் நடக்கும் பட்சத்தில் மே 12 ஆம் திகதி புதிய பாராளுமன்றம் கூடுமென தெரிகிறது.
Powered by Blogger.