மொட்டுடன் பேச்சுவார்த்தை நடத்திய UNP உறுப்பினர்கள்
ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் பொதுஜன பெரமுனவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக இராஜாங்ன அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கூறியுள்ளார்.
பொதுஜன பெரமுன அமைக்கவுள்ள கூட்டணியுடன் இணைந்து கொள்வதற்கு அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறினார்.
எனினும் தமக்கு மக்கள் வழங்கிய ஆணையை மதித்து ஐக்கிய தேசிய கட்சியின் ஊழல்வாத உறுப்பினர்கள் எவரையும் எந்த காரணம் கொண்டும் இணைத்துக் கொள்ளப் போவதில்லை என்று அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி இன்று துண்டுதுண்டாக உடைந்து போயுள்ளதாகவும் இராஜாங்ன அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கூறியுள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவற்றை கூறியுள்ளார்.

Post a Comment