மஹிந்தவுக்கு மோடி வழங்கியுள்ள வாக்குறுதிகள்
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு உயர்ந்தபட்ச பங்களிப்பை இலங்கைக்கு வழங்குவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு நான்கு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று மாலை இந்தியப் பிரதமரைச் சந்தித்த போது நரேந்திர மோடி இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் புதிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காகப் பங்களிப்பு வழங்கவும் இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.
இரு நாடுகளினதும் பாதுகாப்புச் சம்பந்தமான முக்கிய வேலைத்திட்டங்களை அமுல்படுத்துவது தொடர்பிலும், இருநாட்டுப் பிரதமர்களும் உடன்பாட்டுக்கு வந்துள்ளனர்.
இலங்கையில் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டங்களுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் உறுதியளித்துள்ளார்.

Post a Comment