Header Ads

கைது செய்யப்படப் போகும் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பிரபலங்கள்

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட்டவர்களை கைது செய்வதற்கான நீதிமன்ற ஆணையைப் பெறுமாறு சட்டமா அதிபர் பதில் காவல்துறை அதிபருக்கு பணித்துள்ளார்.


முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரன், பிடிஎல் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் பிடிஎல் நிறுவனத்தின் மேலாளர் கசுன் பலியசேன உட்பட்ட பலர் தொடர்பில் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

மோசடி உட்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தே இந்த பணிப்புரையை சட்டமா அதிபர் விடுத்துள்ளார்

ஏற்கனவே இந்த மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அர்ஜூன் மஹேந்திரன் தேடப்பட்டு வருகிறார். அர்ஜூன் அலோசியஸூக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

ரவி கருணாநாயக்க இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பின்னர் தமது அமைச்சு பதவியை ராஜினாமா செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.