Header Ads

மொட்டுவில் சீட் கிடைக்காததால் ரத்ன தேரர் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

அபே ஜனபலய என்ற கட்சியின் கீழ் கொடி சின்னத்தில் எதிர்வரும் பொது தேர்தலில் போட்டியிட உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

மஹாநாயக்க தேரர்களின் ஆலோசனைகளுக்கு அமைவாக பௌத்த தேரர்களுக்கு வேட்பு மனு வழங்காமல் இருக்கவும் அவர்களுக்கு தேசிய பட்டியல் வழங்காமல் இருக்கவும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ள நிலையில் தேரர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

அண்மையில் ரத்தன தேரர் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவையும் இந்த அரசையும் விமர்சித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.