Header Ads

நீர்கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட நபர் தொடர்பான விபரம் வௌியானது

நேற்றிரவு நீர்கொழும்பில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ஹோட்டலுக்குள் நுழைந்த கும்பலொன்று அங்கு பலாத்காரமாக அமர்ந்து மதுபானம் அருந்த முற்பட்ட போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கெக்கிராவ, கணேவள்பொளயைச் சேர்ந்த 33 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான அப்துல் கபூர் அப்துல் அஸீஸ் என்பவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் அந்த ஹோட்டலில் வேலைசெய்து வந்தவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

சம்பவத்தில் காயமடைந்த ஹோட்டல் உரிமையாளர் உட்பட இன்னும் இருவர் மருத்துவ மனையில் உள்ளனர்.

இந்நிலையில் குறித்த பகுதியில் முப்படையினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.