ஒருநாள் நட்டாமை வேலை பார்த்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஸ டி சில்வா சந்தையொன்றிற்கு சென்று மரக்கறி மூடைகளை ஏற்றி இறக்கிய சம்பவம் வைரலாகப் பரவிவருகின்றது.
கொழும்பு மாவட்டத்திற்கும் விதிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று காலை 06 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை தளர்த்தப்பட்டிருந்தது.
இதற்கிடையில் முன்னாள் எம்.பி ஹர்ஸ டி சில்வா இன்று காலை நாரஹேன்பிட்டிய சந்தைத் தொகுதிக்கு விஜயம் செய்தார்.
அங்கு லொறிகளில் ஏற்றி இறக்கப்பட்ட மரக்கறி மூடை தொழிலாளர்களுடன் அவர் அளவளாவிய பின் அவர்களுக்கு உதவிசெய்யவும் முன்வந்தார்.
கலாநிதி ஹர்ஸ டி சில்வா இலங்கையில் இருக்கும் பிரபல பொருளாதார நிபுணர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment