கொரோனாவை அடுத்து சீனாவில் பரவும் ஹொண்டா வைரஸ்? என்ன இது?
சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறைந்து வரும் நிலையில், சீன பிரஜை ஒருவர் மற்றொரு வைரஸ் தொற்றான ஹென்டாவைரஸ் (hantavirus) என்ற தொற்று நோயினால் இறந்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவின் யுனான் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த திங்களன்று பேருந்தில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது இறந்துவிட்டதாக சீனாவின் தேசிய ஆங்கில மொழி செய்திப் பத்திரிகை குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இறந்த நபரோடு அதே பேருந்தில் பயணித்த 32 பயணிகளையும் சீன அதிகாரிகள் பரிசோதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹென்டாவைரஸ்கள் முக்கியமாக கொறித்து உண்ணும் பிராணிகளால் பரவும் வைரஸ் ஆகும்.
ஹென்டாவைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு சோர்வு, காய்ச்சல் மற்றும் தசை வலி ஏற்படும். ஹென்டாவைரஸ் எலிகள் மற்றும் கொறித்து உண்ணும் பிராணிகள் மூலம் பரவுகிறது என்று அல் அரேபியா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஹன்டவைரஸ் என்றால் ஒரு புதிய வைரஸ் அல்ல. அமெரிக்காவின் உயிரியல் ஆய்வு மையத்தகவல்படி, ஹான்டவைரஸ் இனத்தில் 21 க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1978ம் ஆண்டில், தென் கொரியாவின் ஹன்டன் ஆற்றின் அருகே சிறிய நோய்த்தொற்றுடைய வயல் பகுதியில் இருந்து இது ஆரம்பமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ஹன்டன் ஆற்றுக்கு அருகில் ஆரம்பமானதால் இந்த வைரஸூக்கு ஹன்டான் வைரஸ் என்று பெயரிடப்பட்டது. கொரியப் போருக்குப் பின்னர் (1951-1953) இந்த கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் போது ஐக்கிய நாடுகள் சபையின் சுமார் 3000 துருப்புக்களிடையே இரத்தக்கசிவு காய்ச்சல் போன்ற தன்மைகள் இந்த நோயின் காரணமாக ஏற்பட்டன.
1981ம் ஆண்டிலேயே "ஹன்டாவைரஸ்" என்று அழைக்கப்படும் ஒரு புதிய வகை அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் சிறுநீரக நோய்க்குறி (எச்.எஃப்.ஆர்.எஸ்) காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ்கள் அடங்கும்.
இது எலிகளால் பரப்பப்படுகின்றன. காய்ச்சல், கடுமையான தசை வலிகள் சோர்வு உட்பட்ட குணங்குறிகள் இதன்போது தென்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment