Header Ads

அமெரிக்காவில் இருந்து திரும்பிய மஹிந்தவின் மகன் கொரோனா மத்திய நிலையத்தில்

மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவின் மகன் அமெரிக்காவிலிருந்து நேற்று திங்கட்கிழமை இரவு நாடு திரும்பியுள்ள நிலையில் அமைச்சர் அதிரடி முடிவொன்றை எடுத்திருக்கின்றார்.

அவரை வீட்டில் இருந்தவாறே மருத்துவ பரிசோதனைகளை நடத்தும்படி மருத்துவ அதிகாரிகள் அமைச்சருக்கு ஆலோசனை வழங்கியிருக்கின்றனர்.

எனினும் அந்த யோசனையை நிராகரித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, தனது மகனை பண்டாரவளையிலுள்ள கொரோனா வைரஸ் மருத்துவ சோதனை முகாமில் சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Powered by Blogger.