முஸ்லிம் கட்சி ஒன்று சரீயா சட்டத்தை ஏற்படுத்த திட்டமா?
முஸ்லிம் பெயர் தாங்கிய கட்சி ஒன்றின் யாப்பில், இலங்கையில் சரியா சட்டத்தை ஏற்படுத்துவதே நோக்கம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு சம்பந்தமான கண்காணிப்பு குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வர்க்க மற்றும் மாதத்தின் பெயரால் உடைய அரசியல் கட்சிகளின் யாப்பில் இலங்கையின் அரசியலமைப்பை மீறும் நோக்கங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதிகமான தமிழ் அரசியல் கட்சிகளின் பெயரில் உள்ள ஈழம் என்ற சொற்பததம் தனியான இராஜ்ஜியம் என்பதாகவும், இதனூடாக இலங்கை அரசியலமைப்பின் ஒரே நாடு என்பதை சவாலுக்கு உட்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாட்டின் மத நல்லிணக்கத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் அரசியல் கட்சிகளை பதிவு செய்வதை தடை செய்யுமாறு அந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது.

Post a Comment