1000 பிண உறைகள் கேட்கப்பட்டது தொடர்பில் டாக்டர் அனில் ஜாசிங்கவின் விளக்கம்
இலங்கையில் ஆயிரம் பேர் வரை உயிரிழப்பார்கள் என்ற எதிர்பார்பில் இறந்த உடலை சுற்றும் பைகளை (BODY BAGS) செஞ்சிலுவை சங்கத்திடம் இருந்து கொள்வனவு செய்ய எதிர்பார்க்கவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
பிண உறைகளை சுகாதார அமைச்சு கோருவது புதிய விடயம் அல்ல . கடந்தகால அனர்த்தங்களின்போது இவ்வாறு கோரப்பட்டன . உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவங்களிம்போதும் இப்படியான உறைகள் கோரப்பட்டன .
தற்போது நாட்டில் முன்னெடுத்துவரும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு செயற்றிட்டத்திற்கு அமைவாக, ஆயிரம் பேர் வரை உயிரிழப்பார்கள் என்ற துரதிஷ்டமான சூழ்நிலை ஏற்படுவதற்கு எவ்விதத்திலும் சாத்தியக்கூறுகள் இல்லையெனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இலங்கையில் தற்போது கொரோனா தொற்றாளர்களின் வீதம் மிகக் குறைவு என்பதோடு இறப்பு வீதமும் அவ்வாறே காணப்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தாலும் குறித்த பகுதிகளில் வைரஸ் பரவாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எமது சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாகவும் அ்வர் குறிப்பிட்டார்.

Post a Comment