Header Ads

அண்ணன் தம்பி இடையில் காணிப் பிரச்சினை - அண்ணனை கொலை செய்த தம்பி

அநுராதபுரம் - இபலோகம பகுதியில் சகோதரர்களுக்கிடையிலான பிரச்சினையில் மூத்த சகோதரர் கூரிய ஆயுதங்களினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.


இளைய சகோதரருக்கும் மூத்த சகோதரருக்கும் இடையில் காணி பிரச்சினை காணப்பட்டதாகவும், குறித்த பிரச்சினை நேற்றைய தினம் வாய்தர்க்கமாக மாறியமையை தொடர்ந்து இளைய சகோதரர் தனது அண்ணாவை தாக்கி கொலை செய்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 45 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

தாக்கிய இளைய சகோதரர் இராணுவத்தில் கடமையாற்றுவதோடு, காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளர்.

No comments

Powered by Blogger.