முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மகளும் பயணித்த கார் விபத்து
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயோன் முஸ்தபா மற்றும் அவரது மகள் பயணித்த கார் மட்டக்களப்பு அரசடியில் இன்று காலை மதில் மீது மோதியது.
காரில் பயணித்த இருவருக்கும் பாதிப்பில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோதே கார் விபத்துக்குள்ளானது.
விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் மேலதிக தகவல்களை மட்டக்களப்பு போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment