Header Ads

புதுவருட பூஜைக்காக கோயிலுக்கு சென்ற 11 பேர் கைது

திருகோணமலை – கன்னியா ஸ்ரீ காயத்திரி கோவிலில் ஒன்றுகூடிய சிலர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுவருடப் பிறப்பை முன்னிட்டு நேற்று இரவில் 11 பேர் வரை கோவிலில் ஒன்றுகூடி பூசை செய்ய தயாராகியதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பதால் முறையான அனுமதியை அவர்கள் பொலிஸாரிடம் பெறவில்லை என்று கூறப்படுகின்றது.

இதன் காரணமாக அவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட அனைவரையும் பொலிஸ் பிணையில் செல்ல அனுபதிக்கப்பட்னர் எனவும் அவர்கள் மீதான் வழக்கு விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர் 
Powered by Blogger.