Header Ads

இலங்கை கடற்படையை குறிவைத்து தாக்கும் கொரோனா - வெலிசர முகாமில் மட்டும் 180் வீரர்கள்

கடற்படையை சேர்ந்த 180 பேர் இதுவரை கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.


இதற்கமைய வெலிசர கடற்படை முகாமில் 112 படையினருக்கும் விடுமுறையில் சென்றிருந்த 68 படையினருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இரணுவத்தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள் அனைவரும் வெலிசர கடற்படை முகாமை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை - 567

சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை -434

புதிய நோயாளிகள் -44

தற்போது வைத்தியசாலைகளில் மருத்துவச்சோதனையிலுள்ள நபர்கள் 295

நோயிலிருந்து தேறியோர் - 126

மரணித்தவர்கள் - 7

No comments

Powered by Blogger.