Header Ads

ரஞ்சன் ராமநாயக்கவின் O/L பரீட்சைப் பெறுபேறு இதோ!

கல்விப் பொதுத் தரதார சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது.

இலங்கை பரீட்சை திணைக்களத்தின் https://www.doenets.lk/examresults என்ற இணை முகவரிக்குள் பிரவேசித்து பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை முன்னாள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலப்பாட பரீட்சைக்கு தோற்றியிருந்தார்.

அதன்படி அவர் அந்தப் பரீட்சையில் சீ தர சித்தியைப் பெற்றுள்ளதாக தனது முகப்புத்தகத்தில் பதிவேற்றியுள்ளார்.

தான் ஒரு சட்டத்தரணி ஆக வேண்டும் என்ற நோக்கில் ஏற்கனவே உயர் தரப் பரீட்சைக்கும் அவர் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.