திடீரென சுற்றிவளைக்கப்பட்ட Online விற்பனை நிலையம்
இணையத்தளத்தின் மூலம் அதிக விலைக்கு அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்தநிறுவனமொன்று பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, நேற்றைய தினம் (18) கொழும்பு, பார்க் வீதியில் உள்ள குறித்த நிறுவனம் சுற்றி வளைக்கப்பட்டதாக, அதிகாரசபையின் மேல் மாகாண உதவிப் பணிப்பாளர் ஏ.ஏ. ஜசூர் தெரிவித்தார்.
இதன்போது, குறித்த பொருட்கள் அதிக விலையில் விற்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதற்கமைய, சுமார் ரூபா 3 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியான பொருட்களை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
Post a Comment