நாட்டில் கொரோனா அபாயம் நீங்கியுள்ளதா? சுகாதார பணிப்பாளர் இன்று வௌியிட்ட விஷேட அறிவிப்பு
நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும் அதன் வீரியம் இதுவரை தணியவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைமையில் இந்த வைரஸ் சமூகத்தில் பரவலடையாத நிலைமை காணப்படுவதாகவும் அவர் கூறினார்.
ஊடகங்களுக்கு இன்று (18) விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
சில ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டது போன்று கொரோனா வைரஸ் தொற்று முழு அளவில் நீங்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறெனினும், கொரோனா வைரஸ் தொற்று இலங்கையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சமூகத்திற்கு இடையில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதனை வரையறுத்துள்ளதாகவும், அடையாளம் காணப்பட்டவர்கள் சமூகத்துடன் தொடர்பு கொள்வது தடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைரஸ் தொற்று பரவுவதனை தடுப்பதற்கு தொடர்ச்சியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
மக்களின் இயல்பு வாழ்க்கை முன்னெடுக்கப்பட்டாலும் வைரஸ் தொற்று பரவுவதனை தடுப்பதற்கு தொடர்ச்சியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

Post a Comment