Header Ads

இன்று விசாரணைக்கு வந்த சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்பான வழக்கு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என தெரிவித்து கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வு பிரிவில் தங்கவைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை நீதிமன்றில் முன்னிலைபடுத்துமாறு உத்தரவினை பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை எதிர்வரும் ஐந்தாம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


கைது செய்யப்பட்டுள்ள குறித்த நபரின் மனைவி மற்றும் சகோதரர் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரு மனுக்களும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான குமுதினி விக்ரமசிங்க மற்றும் தேவிகா அபேரத்ன முன்னிலையில் விசாரணக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா புத்தளம் பிரதேசத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அண்மையில் கைது செய்யப்பட்டார்.

No comments

Powered by Blogger.