Header Ads

​பொதுச் சுகாதார பரிசோதகர்களின் எச்சரிக்கை - கொரோனாவுக்கு மத்தியில் நாட்டை அச்சுறுத்தும் டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல்

நாட்டில் டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 


நோய் பரவுவதை தடுக்கும் வகையிலான  வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டுமென, சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொரோனா, டெங்கு, எலிக் காய்ச்சல் ஆகிய மூன்று நோய்களும் நாட்டில் வியாபிக்குமாயின், அவற்றுக்காக வைத்திய சிகிச்சை கட்டமைப்பை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை ஏற்படுமென, குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த வருடம் மட்டும் 1352 பேர் எலிக்காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவிக்கிறது.

கடந்த ஜனவரி மாதம் 665 நோயாளர்களும், பெப்ரவரி மாதம் 453 பேரும், மார்ச் மாதம் 188 பேரும், ஏப்ரலில் 45 பேரும் இந்த காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.