உயிரிழந்தவரின் உடலை குடும்பத்தினர் பார்வையிட அனுமதி
கொழும்பு ஐ.டீ.எச். வைத்தியசாலையில் மரணமாகிய பீ.எச்.எம். ஜுனூஸின் உடலை பார்வையிட அவரது குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவரது மகன் பயாஸ் இத்தகவலை கூறினார்.
10 க்கும் மேறபடாதவர்களுடன் இன்று வியாழக்கிழமை, 2 ஆம் திகதி வைத்தியசாலைக்கு வரும்படி அவரிடம் கோரப்பட்டுள்ளது.
இதையடுத்தே உயிரிழந்தவரின் சடலம் குறித்த அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி தீர்மானிக்கப்படுமென தகவல் வெளியாகியுள்ளது.
அதேவேளை அவரது குடும்பத்தினர் நேற்று புதன்கிழமை இரவு பொலிஸ் பாதுகாப்புடன் மற்றுமொரு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பயாஸ் கூறினார்.
கொழும்பு - மருதானை போபஸ் வீதியைச் சேர்ந்த, 75 வயதுடைய, பீ.எச்.எம். ஜுனூஸ், நேற்று முதலாம் திகதி, புதன்கிழமை கொழும்பு ஐ.டீ.எச். வைத்தியசாலையில் மரணமாகியுள்ளார்.
சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவர் கொரோனோ வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment