Header Ads

இலங்கையின் கிழக்கில் மறு அறிவிப்பு வரும் வரை செய்யப்பட்ட பிரதேசம்

அம்பாறை - திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பகுதிகளில் இருந்து வெளிச்செல்வதற்கும், வெளிப்பிரதேசங்களில் இருந்து அந்தப் பகுதிகளுக்கு உட்செல்வதற்கும் மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர். ஆர்.டபிள்யூ. கமல்ராஜ் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா தொற்று நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருக்கோயில் பிரதேசத்தில் உள்ள 9 ஆயிரத்து 800 குடும்பங்களுக்கும், அத்தியாவசிய சேவை பணிகளுக்காக கிராம சேவகர் ஊடாக அனுமதிப் பத்திரம் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் பிரதேச சபை தவிசாளர். ஆர்.டபிள்யூ. கமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.