Header Ads

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த மொட்டுவின் பிரதேச சபை உறுப்பினர் நீக்கம்

சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புயை பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினரின் கட்சி உறுப்புரிமை இரத்து செய்யப்பட்டுள்ளது.

13 வயதுடைய சிறுமியை இவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என தெரிவிக்கப்பட்டது.

கடந்த 07ம் திகதி ஹம்பாந்தோட்டை தனமல்வில பிரதேசத்தில் 13 வயதான சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமி ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

05 நபர்களினால் குறித்த சிறுமி துஷ்பிரயோகத்திற்குற்பட்டுள்ளதுடன் அந்த ஐந்து பேரில்  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தனமல்வில பிரதேச சபை உறுப்பினரும் உள்ளடங்குவதாக தெரியவந்துள்ளது.

துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமி வலிப்பு மற்றும் மனநல கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Powered by Blogger.