ஜனாதிபதி கோட்டாபய ரஜபக்ஷவால் வௌியிடப்பட்டுள்ள அதிவிஷேட வர்த்தமானி
பொதுமக்களின் மத்தியில் அமைதியை பேணுவதற்காக வழமையாக படையினரை ஈடுபடுத்துவதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.(40 ஆம் அத்தியாயம்) பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 12 ஆம் பிரிவினால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைவாக இந்த வர்த்தமானி அறிவிப்பு நேற்று (22) வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் நேற்று (22) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது.
அதற்கமைய நாடு முழுவதிலும் உள்ள நிர்வாக மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கையில் முப்படையினரை ஈடுபடுத்தும் வகையில் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
Post a Comment