கொரோனா தொற்றுக்கு ஆளான கர்ப்பிணிப் பெண் பெற்ற குழந்தை உயிரிழப்பு
கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட கர்ப்பிணி தாய் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் அவரின் கர்ப்பத்தில் காணப்பட்ட சிசு உயிரிழந்துள்ளது.
கொழும்பு மருதானைப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கே இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த சம்பவம் இன்று இரவு இடம்பெற்றதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில் 415 ஆவது கொரோனா தொற்றாளராக குறித்த தாய் அடையாளம் காணப்பட்டார்.
அத்துடன், தற்பொழுது குறித்த கர்ப்பிணி தாய் கொழும்பில் அமைந்துள்ள டி சொய்சா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
உயிரிழந்த சிசுவிற்கு வைத்திய பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றதோடு, சிசுவிற்கு கொரோனா வைரஸின் தாக்கம் காணப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் நோய் காரணமாக உயிரிழந்ததா என்பது தொடர்பிலும் பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றன.
Post a Comment