Header Ads

இலங்கையில் தீவிரமடையும் கொரோனா... இன்று அடையாளம் காணப்பட்டவர்களின் விபரம்


இலங்கையில் இதுநாள்வரையில் காணப்பட்ட கொரோனா தொற்றாளார்களை விட இன்று -24- அதிகமானோர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.


இலங்கை நேரப்படி இரவு 9 மணிவரையிலான கணக்கெடுப்பின் பிரகாரம் 48 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் என தொற்று நோயியல்ப் பிரிவினர் தெரிவித்தமையை சுகாதார அமைப்பும் உறுதிசெய்துள்ளது.

இவர்களுள் கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்த 11 பேரும்,

வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படையினர் 30 பேரும் உள்ளடங்குவதோடு,

விடுமுறையில் சென்ற கொழும்பு, வெலிசறை, கண்டி, பதுளை மற்றும் இரத்தினபுரியைச் சேர்ந்த 5 கடற்படையினரும்,

மேலும் மருதானையைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவரும்,

சற்றுமுன்னர் கொழும்பு 12 இல் ஒருவருமாக இனங்காணப்பட்டுள்ளனர்.

குறித்த 48 பேருடன் சேர்த்து, இலங்கையில் இதுவரை 416 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.