முஸ்லிம்களுக்கு அல்லாஹ்வுடைய பேரருள் கிட்டும்- நாட்டுக்கும் அரசாங்கத்துக்கு பிரார்த்தனை செய்யுங்கள்
கோவிட் 19 வைரஸ் உலகத்தையே பெரும் சவாலுக்கு உட்படுத்தி இருக்கும் ஒரு கால கட்டத்தில் முஸ்லிம் சமுதாயம் ரமழான் நோன்பை எதிர் கொண்டு இருக்கின்றது.
இந்த நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் முஸ்லிம்கள் பொறுமையுடனும் பொறுப்புடனும் செயற்படடுவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச விடுத்திருக்கும் ரமழான் நோன்புக்கான ஆசி செய்தியில் தெரிவித்துள்ளார்.
அந்த ஆசி செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
கொரோனா வைரஸ் என்பது பணத்தினாலோ அதிகாரத்தினாலோ கட்டுப்படுத்தக்கூடிய தொன்றல்ல.
இந்த கொரோனா தொற்று காரணமாக முஸ்லிம் மக்கள் அனைவரும் ஆத்மீக, கலாசார சமூக ரீதியில் பெரும் சவாலை எதிர்கொண்டுருப்பதை நான் நன்கறிவேன்.
இந்த நிலையில் கடந்த காலங் களை விட மிகவும் வித்தியாசமானதாக இந்த வருடத்தை நோக்க வேண்டியுள்ளது.
முஸ்லிம் சகோதர்களான நீங்கள் அனைவரும் பொறுப்புடன் செயல்படுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.
மனித உயிர்களை பாதுகாக்க வேண்டிய ஒரு கடப்பாட்டில் நாங்கள் இருக்கின்றோம். உங்களுக்கு அல்லாஹ்வுடைய பேரருள் இதற்காக கிட்டும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கின்றது.
உங்களது நம்பிக்கை ஒருபோ தும் வீண்போகாது. நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும், அரசாங்கத்துக்கும் உங்களுடைய பிரார்த்தனைகள் இந்த நோன்பு காலத்தில் அதிகம் அதிகம் கிட்டும் என நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.
நீங்கள் இந்த ரமழான் மாதத்தை அதற்காக முழுமையாக பயன்படுத்திக் கொள்வீர்கள் என்று தான் எண்ணுகிறேன்.
ரமழான் காலத்தில் பகல் வேளையில் உண்ணாமல் இரவில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடும் உங்களுக்கு இந்த தடவை உரிய விதத்தில் வழிபாடுகளை மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்காமல் போனதைவிட்டு மனம் வருந்துகின்றேன்.
என்றாலும் கூட நீங்கள் பொறுமையுடனும் பொறுப்புட னும் உங்கள் மதக் கடமைகளை வீடுகளிலிருந்து ஒழுங்காக மேற்கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது
இதற்காக இந்த காலகட்டத்தில் சுகாதாரத் துறையினரின் ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்க ளையும் ஏற்றுக் கொண்டு உங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவதன் மூலம் நாம் இந்த நெருக்கடியிலிருந்து விரைவாக வெற்றி பெற முடியும் என நம்புகிறேன்.
என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment