தடை விதித்த பதில் பொலிஸ் மா அதிபருக்கு சஜித்தின் காரசாரமான கடிதம்
கட்சித் தலைவர்களை அழைத்து நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து ஆராய்ந்து முடிவுகளை அறிவிப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிக்கு பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரட்ண தடை விதித்தமைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
ஜனநாயகத்தை மீறும் வகையிலும், கொரோனா தொற்று ஒழிப்பு செயற்பாட்டின் எதிர்கட்சியினது முயற்சிக்கு இடையூறு ஏற்படும் வகையிலும் பதில் பொலிஸ்மா அதிபரது இந்த தீர்மானம் காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பதில் கடிதமொன்றையும் அவர் இன்றைய தினம் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பிவைத்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இரண்டு முறை கட்சித் தலைவர்களுக்கான மாநாடு நடத்தப்பட்டதை அரசாங்கமும் பொலிஸாரும் சுகாதாரத்துறையினரும் அனுமதித்த வகையில் எதிர்கட்சியின் இந்த முயற்சிக்கு அரசாங்கம் முட்டுக்கட்டை இட்டிருப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான முந்தைய செய்தியை வாசிக்க சஜித் ஊடக சந்திப்பு நடத்தக் கூடாது - பதில் பொலிஸ் மா அதிபர் அதிரடி

Post a Comment