Header Ads

சுமந்திரனின் சூழ்ச்சி - அதிகாரத்தை கைப்பற்றும் சதி

இலங்கை அரசியலமைப்பின் சில விதிகளைப் பயன்படுத்தி நாட்டினுள் அரசியல் உறுதியற்ற தன்மையை ஏற்படுத்தி, அதிகாரத்தை கைப்பற்றும் சதியை தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மேற்கொள்ள தயாராகுவதனால் அதை தடுக்க இந்த சந்தர்ப்பத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கலாநிதி சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.


நேற்று (22) அனுராதபுரத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

"பாராளுமன்ற தேர்தலை ஜூன் 20ம் திகதி நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு நியமித்ததை வெவ்வேறு கட்சிகள் அதை சவால் செய்வதை நாம் காணலாம்.

அவர்கள் கொரோனா வைரஸை  இதற்கு ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள். நோயாளர்கள் குறித்து தெளிவாக கூற வேண்டும், நாட்டு மக்கள் குறித்து காணப்படும் கவலைக்கு, அவர்கள் தொடர்பான வேதனைக்கு, இது கவலைக்குரிய விஷயம் அல்ல, தெளிவாக தனது சொந்த சக்திக்காக, அல்ல அதிகாரத்தைப் பெறுவதற்காக.

உண்மைகளை ஆராய்ந்தால், இந்த அரசியல் சதித்திட்டத்தின் சூத்திரதாரி முன்னாள் தமிழ் தேசிய கூட்டணி (டி.என்.ஏ) யாழ்ப்பாண மாவட்ட எம்.பி. சுமந்திரன் என்பதைக் காண்கிறோம்.

இந்த கொரோனா தொற்றுநோய் பரவுவதின் போது ஒரு தேர்தலைப் பற்றி பேசுவது தவறுதான்  நாங்கள்  அதை ஒப்புக்கொள்கிறோம். இருப்பினும் எங்களின் விருப்பு தெரிவித்தாலும் அல்லது வெறுப்பு தெரிவித்தாலும் பாராளுமன்ற தேர்தலை நாடவேண்டியுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிடுவது வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டடங்களில் மட்டுமே என்பதுடன், அவர்களை பெற்றுக்கொள்வது அதிகபட்சம் 16 ஆசனங்களை மட்டுமே. இந்த நிலையில் நாட்டின் அதிகாரத்தை எவ்வாறு கைப்பற்றுவது என்பது குறித்த விளக்கத்தை கடவுள் தான் சன்னவிற்கு தெளிவுபடுத்த வேண்டும்.

No comments

Powered by Blogger.